Published : 05 May 2020 07:36 AM
Last Updated : 05 May 2020 07:36 AM
அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 பேர் உட்பட 24 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பேருக்கும் நேற்று ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட கரூரைச் சேர்ந்த ஒருவருக்கு இரு தினங்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அரியலூரில் இருந்து இந்தப் பயிற்சிக்கு சென்ற 108 ஆம்பு லன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவரு டன் பணிபுரிந்தவரின் ரத்த மாதிரிகள் சேரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பயிற் சிக்கு சென்று வந்தவர் உட்பட 3 ஓட்டுநர்கள், ஒரு உதவி செவி லியர் என 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
அதேபோல, சென்னை கோயம் பேடு சந்தையில் கூலி வேலை பார்த்து, அரியலூர் மாவட்டத்துக்கு திரும்பியவர்களில் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பதும் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 24 பேரும் திருச்சி மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத் துச் செல்லப்பட்டனர்.
இதனால் அரியலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெரம்பலூரில் 25 பேருக்கு...
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வேலை பார்த்து வந்த பலர் தங்களது குடும்பத்தினருடன் பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இவர்களது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப் பட்டதில் நல்லறிக்கையில் 7 பேர், புதுவேட்டக்குடி 3, நன்னை 1, கீழ பெரம்பலூர் 2, அருணகிரிமங்கலம் 2, துங்கப்புரம் 2, சில்லக்குடி, திம்மூர், கொளத்தூர், இலுப்பைக் குடி, அம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் தலா 1 உட்பட 25 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.
இதையடுத்து, 25 பேரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளதால் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள இம்மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது.
கரூரில் 1, திருச்சியில் 4
கோயம்பேட்டில் வேலை பார்த்து வந்த நேற்று முன்தினம் சொந்த ஊர் திரும்பிய கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 4 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நேற்று மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT