Published : 17 Aug 2015 08:57 AM
Last Updated : 17 Aug 2015 08:57 AM

கல்வி நிறுவனங்களின் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படையில் வங்கிகள் கல்வி கடன் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர் கோவிலைச் சேர்ந்தவர் பி.என்.சுப்பிரமணியன். இவர் சென்னை யில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் எம்.டெக். படிப்பில் (சூரிய மின்சக்தி) சேர்ந்துள்ளார். இவருக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ரூ.4.70 லட்சம் செலுத்த வேண்டியது வரும் என பல்கலைக்கழகம் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கியது. அந்த சான்றிதழ் அடிப்படையில் கல்விக் கடன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாணவர் விண்ணப் பித்தார். ஆனால், அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டண அடிப் படையில் ரூ.1.70 லட்சம் மட்டுமே கல்விக் கடன் வழங்க முடியும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முழு கட்டணத் தையும் கல்விக் கடனாக வழங்க வங்கிக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். வங்கி பதில் மனுவில், கல்வி கட்டண நிர்ணயக்குழு விதிப்படி ஒவ்வொரு பருவத்துக்கும் ரூ.30000 வீதம் கல்விக் கட்டணம், ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் விடுதி கட்டணம் மட்டுமே கல்வி கடனாக வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மாநில கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் விதிப்படிதான் கல்விக் கட்டணம் வழங்க முடியும் என்ற கருத்தை உயர் நீதிமன்ற தலைமை அமர்வு 2013-ம் ஆண்டில் நிராகரித்து உத்தரவிட்டது. படிப்பில் உயர்ந்தும், பொருளாதாரத்தில் தாழ்வாகவும் உள்ள மாண வர்களுக்கு கல்வி நிறுவனம் கேட்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீத கட்டணம் மட்டும் கல்வி கடனாக வழங்கப்படும் என வங்கிகள் தெரிவிப்பது கல்விக் கடன் வழங்குவதற்கான நோக் கத்தை நிறைவேற்றாது

கல்விக் கட்டண நிர்ணய குழு பரிந்துரைக்கும் கட்டணம் கல்வி கடனாக வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. மனுதாரருக்கு அவர் சேர்ந்துள்ள தனியார் பல்கலைக் கழகம் வழங்கிய கல்வி கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படை யில் கல்விக் கடன் வழங்க வேண் டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x