Published : 01 May 2020 03:17 PM
Last Updated : 01 May 2020 03:17 PM
தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 38 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், ஏற்கெனவே 6 பேர் குணமடைந்தனர்.
இந்நிலையில், புளியங்குடியைச் சேர்ந்த மேலும் 3 பேர் குணமடைந்தனர். அவர்கள் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 6 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. நன்னகரம் கரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், புளியங்குடியும் மெல்ல விடுபட்டு வருகிறது.
தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சங்கரன்கோவிலில் அமைச்சர் உதவி:
கரோனா வைரஸ் தொற்று பரவரைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழை மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர். சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஆட்டோ, கார் ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 750 பேருக்கு அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி இலவச அரிசி பைகள், காய்கறி தொகுப்பு பைகளை இன்று வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார்.
மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் கண்ணன், மாவட்ட கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவர் வேல்சாமி, மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT