Published : 25 Aug 2015 08:38 AM
Last Updated : 25 Aug 2015 08:38 AM
திருவாரூரைச் சுற்றியுள்ள காவிரி ஆற்றுப் படுகையில் ஓஎன்சிஜி நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகி யோர் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் தரப் பில் வழக்கறிஞர்கள் சிவ.ராஜ சேகரன், அருள்ராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்ட தாவது:
மீத்தேன் எடுக்கும் திட்டம் இல்லை என்று ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது. ஆனால், காவிரி ஆற்றுப் படுகையில் 2,500 கி.மீ. பரப்பளவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதற்காக 2008-ம் ஆண்டு பெற்றுள்ள சுற்றுச்சூழல் அனுமதியில், ஷேல் காஸ் எடுக்கும் திட்டத்தை சேர்த்து திருத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் ஓஎன்ஜிசி கோரியுள்ளது.
ஷேல் காஸ் எடுக்கும் திட்டமும், மீத்தேன் திட்டத்துக்கு இணையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத் தக்கூடியது. இரு வகையான காஸ் எடுக்கவும் ஒரே வகையான தொழில் நுட்பம்தான் பின்பற்றப் படுகிறது.
மேலும், காவிரி ஆற்றுப் படுகை யில் மேற்கொள்ளப்படும் பணிக் கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறும் கெயில் நிறுவனம், காவிரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கவும், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடவும் மத்திய அரசிடம் உரிமம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வாதத்துக்கு ஓஎன்ஜிசி மற் றும் கெயில் நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்ட அமர்வின் உறுப்பினர்கள், விசாரணையை செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்குக்கு உதவி செய்யும் வகையில் மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ, தீர்ப்பாயத்தில் ஆஜ ராகியிருந்தார். தன்னையும் மனு தாரர் தரப்பில் சேர்க்க பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் லெனின் ராஜப்பா வைத்த கோரிக்கையை அமர்வின் உறுப் பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT