Published : 22 Aug 2015 11:08 AM
Last Updated : 22 Aug 2015 11:08 AM
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.168 அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2566-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ஒரு சவரன் ரூ.20,528 ஆக உள்ளது.
சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.38.90-ஆகவும், மொத்த விற்பனையில் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.36,360-ஆகவும் இருக்கிறது.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கிராம் ரூ.2 ஆயிரத்து 344 மற்றும் ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 752 என்ற விலைக்கு விற்பனை ஆனது. அதன் பிறகு தினமும் படிப்படியாக விலை ஏறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT