Published : 30 Apr 2020 08:31 AM
Last Updated : 30 Apr 2020 08:31 AM
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றுக்கு 20 டன் மாங்காய்கள் உதிர்ந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. குறிப் பாக, போச்சம்பள்ளி, சந்தூர், செல்லம்பட்டி, தாதம் பட்டி, மத்தூர், ஆனந்தூர், ஊத்தங்கரை பகுதி களில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் மா மரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் டன் கணக்கில் உதிர்ந்தன.
இதுகுறித்து மா விவசாயிகளின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் சவுந்தரராஜன் கூறும் போது, ‘‘நேற்று முன்தினம் சூறாவளிக்காற்று டன் பெய்த ஆலங்கட்டிமழையால், போச்சம் பள்ளி, ஊத்தங்கரை பகுதிகளில் மட்டும் 20 டன் மாங்காய்கள் உதிர்ந்துள்ளன. இவற்றை வியாபாரிகள், கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்தனர். சூறாவளியுடன் பெய்த மழை யால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
மின் கம்பங்கள் சேதம்
தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரூர், பாலக்கோடு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக அளவாக அரூரில் 38 மி.மீட்டரும், பாலக்கோட்டில் 32 மி.மீட்டர், தருமபுரி, மாரண்ட அள்ளியில் தலா 2 மி.மீட்டரும் மழை பதிவானது.
மழையின்போது, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலமான காற்று வீசியது. குறிப்பாக, அரூர் பகுதியில் வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களும், மரக்கிளை களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால், அரூர் வட்டத்தில் செல்லம்பட்டி, கீழானூர், வாலெடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT