Last Updated : 25 Apr, 2020 02:33 PM

 

Published : 25 Apr 2020 02:33 PM
Last Updated : 25 Apr 2020 02:33 PM

பிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்த தானம் அளிக்கத் தயார்: கரோனாவில் இருந்து மீண்ட விருதுநகர் இளைஞர்

உள்படம்: கரோனாவில் இருந்து மீண்ட நபர்

விருதுநகர்

பிளாஸ்மா சிகிச்சைக்காக ரத்த தானம் அளிக்க தயாராக உள்ளதாக கரோனா சிகிச்சையில் இருந்து மீண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அ௫ப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் முகமது ரபீக். பிரியாணி கடை நடத்தி வ௫கிறார். இவர் கடந்த மாதம் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று தி௫ம்பியவர்.

கடந்த மார்ச் 30-ம் தேதி இவ௫க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

19 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து முகமது ரபீக் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிலும் தனிமையைக் கடைபிடித்துவரும் முகமது ரபீக் கூறுகையில், ”எனக்கு முதலில் கரோனா குறித்த எந்த அறிகுறியும் இல்லை. அதாவது தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் பரிசோதனையில் கரோனா வைரஸ் தாக்குதல் இருந்தது தெரியவந்தது.

சிகிச்சையில் இருந்த போது மருத்துவர்கள் அறிவுரைப்படி நடந்து கொண்டேன். குரான் படிப்பதோடு தினமும் 5 முறை தொழுகையும் செய்து வந்தேன். வழக்கம்போல் உணவுகளும் எடுத்துக் கொண்டேன்.

தற்போதைய ஆய்வில் கரோனாவிலி௫ந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்துவதன் மூலம் அந்நோயிலி௫ந்து விடுபடலாம் என தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளன.

கரோனா நோயாளிகளைக் காப்பாற்ற ரத்த தானம் அளிக்க தான் எப்போதும்” தயார் என்றார்.

மேலும்,வேற்றுமையில் ஒற்றுமை நமது நாட்டின் பெ௫மை. அதை காக்க வேண்டும். மதவெறி தீர்ந்தால் இந்தியா வல்லரசு ஆகும். உலக மக்கள் கரோனாவில் இ௫ந்து விடுபட பிரார்த்திப்பதோடு ம௫த்துவமனையில் தமக்கு சிகிச்சை அளித்த ம௫த்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், கரோனா பரவாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டிள்ள காவல்துறைக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x