Published : 23 Apr 2020 07:20 AM
Last Updated : 23 Apr 2020 07:20 AM

முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கேள்விக்குறியாக்கி கரோனா பரவலுக்கு காரணமாகும் மார்க்கெட்- கூட்டத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சி

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிகமாக செயல்படும் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு வரும் நூற்றுக்கணக்கானோர் சமூக இடைவெளியை கடைபிடிக் காததால், கரோனா தொற்று அதிகரிக்குமோ என திருச்சி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் அதை மூடிவிட்டு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும், பழைய பால் பண்ணை முதல் செந்தண்ணீர்புரம் வரை யிலான சர்வீஸ் சாலையில் திறந்த வெளியில் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 20 நாட்களுக்கு மேலாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு வியாபாரிகள், சிறுவியாபாரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. மேலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக் காமல் கூட்டமாக நின்று காய்கறி களை வாங்குவதும், விற்பதுமாக இருக்கின்றனர். லாரிகளில் காய் கறிகளை இறக்கி ஏற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் சமூக இடைவெளியை கடை பிடிப்பதில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“பழைய பால்பண்ணை சந்திப் பில் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார், மார்க்கெட்டுக்கு வருவோரிடம் சமூக இடை வெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியும் யாரும் அதை பின்பற்றுவதில்லை. மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டை திறந்தவெளிக்கு மாற்றியதே நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற் காகத்தான். ஆனால், அந்த நோக்கமே தற்போது சிதைந்து வருகிறது” என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப் போர் சிலர் கூறியபோது, “மொத்த மற்றும் சிறு வியாபா ரிகள், தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கா ததால், கரோனா தொற்று அதிகரிக் குமோ என்ற அச்சம் இப்பகுதி மக்களிடம் உள்ளது” என்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத் திடம் கேட்டபோது, “தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x