Published : 21 Aug 2015 12:08 PM
Last Updated : 21 Aug 2015 12:08 PM
அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
சென்னையில் தியாகராய நகர், மயிலாப்பூர், அண்ணா சாலை, பரங்கிமலை, தாம்பரம் ஆகிய தலைமை அஞ்சல் நிலையங்களில் அஞ்சலக ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. இவற்றில் போதிய அளவு பணம் எப்போதும் உள்ளது.
அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், மேற்கண்ட ஏடிஎம் மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் நிலையத்தில் ஏடிஎம் கார்டுக்காக விண்ணப்பிக்கலாம். ஏடிஎம் கார்டு பயன்படுத்துவதற்கு சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 இருப்பு இருக்க வேண்டும்.
இவ்வாறு மெர்வின் அலெக்சாண்டர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT