Published : 17 Aug 2015 09:08 AM
Last Updated : 17 Aug 2015 09:08 AM
புதுச்சேரி அருகே சாராயக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 5 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடையின் பொருட்களை வெளியே தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அடுத்த பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேட்டில் சாராயக்கடை திறக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு கொட்டகை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடத்த ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. அதன்படி கடையை திறக்க அதன் உரிமை யாளர்கள் மற்றும் சிலர் பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
இது குறித்த தகவல் கிராம மக்கள் மத்தியில் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த கொமந்தான்மேடு, மேல் பரிக்கல்பட்டு, கீழ் பரிக்கல் பட்டு, சின்ன ஆராச்சிக்குப்பம், பெரிய ஆராச்சிக்குப்பம் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் தங்க விக்ரமன் தலைமையில் திரண்டு சென்று கடையை திறக்க எதிர்ப்பு தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, ‘‘கொமந்தான்மேடு-கடலூர் செம்மண்டலம் சாலையை இணைக்கும் வகையில், பெண்ணை யாற்றில் தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணையை புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீராதாரப் பிரிவு மூலம் ரூ.8 கோடி மதிப்பில் அமைத்திருந்தது. இந்த தரைப் பாலத்தில் கொமந்தான்மேடு உள் ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடலூர் உள்ளிட்ட பகுதி களுக்கு சென்றுவர எளிதாக இருந்தது.
அவசர தேவைக்கும் இந்த வழி உறுதுணையாக இருந்தது. ஆனால் இந்த பாலத்தின் வழியாக கொமந்தான்மேட்டில் இருந்த சாராயக் கடைக்கு அதிகளவில் மதுபிரியர்கள் செல்வதாகவும், இதனால் எதிர்புறத்தில் உள்ள கடலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தரைப் பாலத்துக்கு தடுப்பு வேலி அமைத்து கடலூர் மாவட்ட நிர்வாகம் பாதைக்கு தடை விதித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கொமந்தான்மேடு உள்ளிட்ட பகுதி மக்கள் பாதிக்கப் பட்டு வருகின்றனர். மீண்டும் இந்த பகுதியில் சாராயக்கடை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
இதனிடையே சிலர் சாராயக் கடையினுள் புகுந்து அங்கிருந்த சாராயக் கேன் உள்ளிட்ட பொருட் களை வெளியே தூக்கி வீசினர். இதனால் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த பாகூர் போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT