Published : 12 Apr 2020 09:15 PM
Last Updated : 12 Apr 2020 09:15 PM
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசுக்கு உலகளவில் ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் 69 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து சென்று வந்த தொழிலதிபர் ஒருவர் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்ந்தார். தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். டெல்லி தப்லிக் மாநாட்டுக்கு சென்று திரும்பிய 26 பேருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் காங்கயம் சாலையை சேர்ந்த 8 வயது சிறுவன், காங்கேயம் ரோடு பெரியதோட்டத்தை சேர்ந்த 54 வயதுடையவர், பெரியதோட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், காங்கயம் ரோடு ரேணுகாநகரை சேர்ந்த 10 வயது சிறுவன், குமரானந்தாபுரம் இந்திராநகரை சேர்ந்த 36 வயது பெண், மங்கலம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த 25 வயது ஆண், அதே பகுதிகளை சேர்ந்த 45 வயது பெண், பெரிதோட்டத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண், ரேணுகாநகரை சேர்ந்த 31 வயது பெண், அவிநாசி தேவராயம்பாளையத்தை சேர்ந்த 65 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் மற்றும் ஒரு வயது சிறுவன், 47 வயது பெண்.
அவினாசி தேவராயம்பாளைத்தை 22, 24 வயது பெண், திருப்பூர் தேவராயம்பாளையத்தை சேர்ந்த 26 வயது பெண், தேவராயம்பாளையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 8 வயது பெண், 5 வயது சிறுமி, 85 வயது மூதாட்டி, 3 வயது சிறுமி, மற்றொரு 3 வயது சிறுமி, 29 வயது ஆண், 55 வயது ஆண்கள் 2 பேர், காங்கேயம் ரோடு பெரியதோட்டத்தை சேர்ந்த 50 வயது ஆண், மங்கலம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த 12 வயது சிறுவன், தாராபுரம் நாச்சிமுத்துபுதூரை சேர்ந்த 17 வயது சிறுவன், தாராபுரம் கொளஞ்சிவாடியை சேர்ந்த 48 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த 19 வயது மற்றும் 22 வயது ஆண், தாராபுரம் சொக்கநாதபாளையத்தை சேர்ந்த 30 வயது பெண், தாராபுரம் அட்டவானிமஜீத்தெருவை சேர்ந்த ஒரு ஆண், தாராபுரம் நாச்சிமுத்துபுதூரை சேர்ந்த ஆண் என மொத்தம் திருப்பூர் மாநகர பகுதிகளில் 11, அவிநாசி பகுதியில் 15, தாராபுரத்தில் 7, மங்கலத்தில் 2 என மொத்தம் 35 பேர். இதில் 17 பெண்கள் மற்றும் 18 ஆண்கள் அடங்குவர்.
டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களின் குடும்பங்களை சேர்ந்த 35 பேர் ஒரேநாளில் பாதிக்கப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்தில் 61 பேர் கரோனா தொற்று வைரஸ் ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT