Published : 12 Apr 2020 07:25 AM
Last Updated : 12 Apr 2020 07:25 AM
‘ஜூம்’ செயலி பாதுகாப்பானதா?
கரோனா தாக்கத்தின் நடுவே, அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ‘ஜூம்’ செயலி அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஜூம்’ செயலி, பாடம் நடத்துவது முதல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது. இதனால் ‘ஜூம்’செயலி மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இதற்கிடையே ஜூம் செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன. ‘ஜூம் பாமிங்’ எனப்படும் பிரச்சினை தவிர, தரவுகள் சேகரிப்பு குறியாக்கம் (Encryption) பிரச்சினைஉள்ளிட்ட புகார்களும் எழுந்துள் ளன. ‘ஜூம்’ பயன்பாடு தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகளும் செய்யப்படுகின்றன.
தொடரும் புகார்களால் பயனாளிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ‘ஜூம்’ செயலி மற்றும் அது தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்து அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்:
‘ஜூம்’ (Zoom) செயலி என்ன செய்கிறது?
‘ஜூம்’ செயலி வீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் சேவை. இதன் மூலம், இணையத்தில் வீடியோ உரையாடல்களை மேற்கொள்ளலாம். இணையதளத்தை செயலி வடிவில் பயன்படுத்தலாம்.
‘ஜூம்’ சேவை அறிமுகமானது எப்படி?
‘ஜூம்’ பல ஆண்டுகளாக இருக்கிறது. ‘எரிக் யுவான்’ எனும் சீன அமெரிக்கர் 2011-ம் ஆண்டில், ஜூம் சேவையை தொடங்கினார். இச்செயலி, 2013-ம் ஆண்டு முதல் வீடியோ சந்திப்பு சேவையை வழங்கி வருகிறது. ஏற்கெனவே தொழில்முறை பயனாளிகள் மத்தியில் பிரபலமாக இருந்தது. கரோனா சூழலில் வீடியோ சந்திப்பு வசதியை நாடுபவர்கள் மத்தியிலும் தற்போது பிரபலமாகி வருகிறது.
‘ஜூம்’ செயலி திடீரென பிரபல மானது ஏன்?
இணையத்தில் வீடியோ சந்திப்பு வசதியை வழங்கும் சேவைகள் பல இருக்கின்றன. இந்தச் சேவைகளில் ஜூம் செயலி மட்டும் தனித்துநின்று பிரபலமானதற்கு, இதன் எளிமையே முக்கிய காரணம். அதாவது ஜூம் செயலி பயனாளிகளுக்கு மிகவும் நட்பானதாக அமைந்துள்ளது. எனவே, யார் வேண்டுமானாலும் இதை எளிதாக பயன்படுத்த முடிகிறது. இதன் காரணமாகவே, ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பு நடத்த ஜூம் செயலியை நாடுகின்றனர். நாடகக் கலைஞர்கள் ஜூம் செயலி மூலம் நாடகம் நடத்துகின்றனர். எழுத்தாளர்கள் ரசிகர்களை சந்திக்கின்றனர். நண்பர்கள் பரஸ்பரம் ஆன்லைனில் சந்திக்கின்றனர்.
ஜூமில் இப்போது என்ன பிரச் சினை?
‘ஜூம்’ செயலி பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், அதன்பல்வேறு அம்சங்களும் உற்று கவனிக்கப்படுகின்றன. இதில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளும் தெரியவந்துள்ளன. இவற்றில், ‘ஜூம் பாமிங்’ என்பதும் ஒன்று.
அதென்ன ஜூம் பாமிங்?
ஜூம் வீடியோ சந்திப்புகளில், அழைக்கப்படாத அந்நிய நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்துஅநாகரிகமாக நடந்து கொள்வதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் ‘ஜூம் பாமிங்’ என்கின்றனர். ஜூம் செயலியின் பக்கவிளைவு என இதைச்சொல்லலாம். இதன் காரணமாக,‘ஜூம்’ சேவையை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர்.
ஜூம் செயலியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
‘ஜூம்’ பாமிங் மட்டும் அல்ல, ஜூமில் உள்ள பிரச்சினை. தனியுரிமை (Privacy) சார்ந்த கவலைகளும் எழுந்துள்ளன. நிறுவனத்தின் சீன தொடர்பும் கேள்விகளை எழுப்புகின்றன. மேலும், பயனாளிகள் தகவல்களை முகநூலில் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்தச் சேவையின் குறியாக்கம் (Encryption) குறித்தும் சந்தேகங்கள் இருக்கின்றன. எனவே, ஜூம் பயன்பாட்டில் கவனம் தேவை என்று சொல்லப்படுகிறது.
இந்த சர்ச்சைகளுக்கு ஜூம் நிறு வனம் அளிக்கும் பதில் என்ன?
‘ஜூம்’ சேவை தொடர்பான கேள்விகளையும், சர்ச்சைகளையும் நிறுவனம் அலட்சியம் செய்யாமல், அவற்றை சரிசெய்வதில் உரிய கவனம் செலுத்தி வருகிறது. ‘ஜூம்’ நிறுவனர், எரிக் யுவான், ‘ஜூம்’ தொடர்பான பிரச்சினைகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றைசீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். ஜூம் பாமிங் பிரச்சினையைப் பொறுத்தவரை, ஸ்கிரின்ஷேரிங்கை (Screen Sharing) கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல வழிகளை நிறுவனம் தெரிவித்துள்ளது. (https://blog.zoom.us/wordpress/2020/03/20/keep-uninvited-guests-out-of-your-zoom-event/) மேலும், 90 நாட்களுக்கு புதிய அம்சங்கள் அறிமுகத்தை நிறுத்தி வைத்து பிரைவசி விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
பயனாளிகள் என்ன செய்ய வேண்டும்?
ஜூம் செயலி தொடர்பான குற்றச்சாட்டுகள், இணைய சேவைகளில்உள்ள தனியுரிமை (Privacy) கவலையை வெளிப்படுத்தியுள்ளன. எந்த ஓர் இணைய சேவையிலும், தனியுரிமை பாதுகாப்பு ஆதார அம்சமாக இடம்பெற்றிருக்க வேண்டும் எனும் கோரிக்கையை இது வலுப்படுத்துகிறது. பயனாளிகள் தரப்பில், அவர்கள் பயன்படுத்தும் சேவையின் தன்மை குறித்த விழிப்புணர்வு மேலும்தேவை என்பதையும் உணர்த்து கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT