Published : 10 Apr 2020 07:40 AM
Last Updated : 10 Apr 2020 07:40 AM
தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று கோடை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் தணிந்தது.
காற்று மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தேனி, திருப்பூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி உட்பட தமிழகம் முழுவதும் பரவ லாக நேற்று இடியுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக கரூர் மாவட்டம் மயிலம்பட்டியில் 71 மி.மீ. மழை பதிவானது.
சென்னை, புறநகர் பகுதிகளி லும் சூறைக்காற்றுடன் மழை பெய் தது. வட சென்னை பகுதிகளான திரு வொற்றியூர், மாதவரம், மணலி, மாத் தூர் மற்றும் தருமபுரி மாவட்டம் தீர்த்த மலை உள்ளிட்ட சில பகுதி களில் ஆலங்கட்டி மழை பெய்தது. வெயிலின் தாக்கம் தணிந்ததால், 2 வாரங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரம் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது.
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய துணைத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.
இடி, மின்னல் தாக்கியதில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் ஆடு மேய்த்த விவசாயி விஜயன் (42) என்பவரும், செதில் பாக்கம் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற புஜ்மா (49) என்ற பெண்ணும் நேற்று உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT