Published : 03 Apr 2020 12:59 PM
Last Updated : 03 Apr 2020 12:59 PM
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியப் பகுதி கிராமங்களில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான முகக்கவசம், சோப்புகள், சானிடைசர்கள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதி கிராமங்களான அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துறை, மாங்கரை, குட்டத்துப்பட்டி, தர்மத்துப்பட்டி, கரிசல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திமுகவினர் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
இத்துடன் முகக்கசவம், சோப்புகள், சானிடைசர்களையும் பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றனர்.
இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ப.க.சிவகுமாருசாமி கூறுகையில், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி அறிவுரையின்பேரில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். இதற்காக ஒன்றிய பணியாளர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
இத்துடன் திமுக சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள முகக்கவசம், சோப்புகள், சானிடைசர்களை ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமமக்களுக்கு வழங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்திவருகிறோம், என்றார்.
இலவச முகக்கசவம், சோப்பு, சானிடைசர் வழங்கும் பணியில் கன்னிவாடி திமுக பேரூர் செயலாளர் சண்முகம், ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாகரன், கரிசல்பட்டி ஊராட்சித்தலைவர் பால்ராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT