Published : 03 Apr 2020 07:35 AM
Last Updated : 03 Apr 2020 07:35 AM
பெரம்பலூர்/ தஞ்சாவூர்/விருத்தாசலம்
தமிழக முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகை ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் நேற்று வழங்கப்பட்ட நிலையில் போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிவாரணத் தொகை வழங்கு வதன் காரணமாக பெரம்பலூர் நகரில் நேற்று வழக்கத்துக்கு மாறாக மக்கள் நடமாட்டம் அதிக ரித்துக் காணப்பட்டது. ரேஷன் கடை பாதுகாப்பு பணிக்கு போலீஸார் பலர் சென்றிருந்ததால் சாலைகளில் கட்டுப்படுத்த யாரும் இல்லாததால் அதிகமானோர் அநாவசியமாக இருசக்கர வாகனங்களில் சுற்றினர்.
ரேஷன் கடைகளில் போதிய சமூக இடைவெளியைப் பின்பற் றாமல் பொதுமக்கள் திரண்டதால் ஒரு சில இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்யும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் மட்டும் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் கீழவாசல் காவடிக்காரத் தெரு உள்ளிட்ட பல இடங்களில் ஒரு வீட்டுக்கு பொதுமக்களை வர வழைத்து டோக்கன்களை வழங்கினர்.
இதனால், சமூக இடை வெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தவிர்க்க வீடுகளுக்கே சென்று டோக்கன்களை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ராமநத் தத்தை அடுத்த ஆலத்தூர் ரேஷன் கடையில் சர்க்கரை 1 கிலோவுக்கு 600 கிராம் மட்டுமே உள்ளதாகவும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் அரசு நிர்ணயிக் கப்பட்ட அளவை விட எடையை குறைத்து பொதுக்களுக்கு வழங்குவதாகவும் கூறி கிராம இளைஞர்கள் கடையை முற்றுகையிட்டனர். பின்னர், வருவாய்த் துறையினரால் முறையாக எடை கண்காணிக் கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT