Published : 30 Mar 2020 03:52 PM
Last Updated : 30 Mar 2020 03:52 PM
தேனி உழவர் சந்தையில் ஒவ்வொரு கடையாக அலைந்து காய்கறி வாங்குவதைத் தவிர்க்கும் வகையில் காய்கறி பை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1 8வகையான காய்கறிகள் ரூ.150 வழங்கப்படுகிறது.
தேனி உழவர் சந்தையில் 80 கடைகள் உள்ளன. தினமும் 40 டன் காய்கறிகள் விற்பனையாகின்றன. தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உழவர் சந்தை தேனி புதிய பேருந்துநிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமூகஇடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் ஒவ்வொரு காய்கறிகளையும் வெவ்வேறு கடைகளுக்குச் சென்று வாங்கும் நிலையை மாற்ற காய்கறி பை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 18 வகையான காய்கறிகள் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதில் தலா அரை கிலோ அளவிற்கு கத்தரிக்காய், தக்காளி, வெண்டை, அவரைக்காய், பச்சை மிளகாய், கேரட், பெல்லாரி, சின்னவெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள், கீரை, எலுமிச்சை, வாழைக்காய் என்று 18 வகையான பொருட்கள் இதில் உள்ளன.
காய்கறிகள் விவரம்:
1.கத்தரிக்காய்- 1/4 கிலோ
2.தக்காளி- 1 கிலோ
3.வெண்டைக்காய்- 1/4 கிலோ
4.அவரைக்காய்- 1/2 கிலோ
5.முருங்கைக்காய்- 1/4 கிலோ
6.பச்சை மிளகாய்- 1/2 கிலோ
7.பீன்ஸ்- 1/2 கிலோ
8.கேரட்- 1/2 கிலோ
9.உருளைக்கிழங்கு- 1/2 கிலோ
10.சின்ன வெங்காயம்- 1/4 கிலோ
11.பெரிய வெங்காயம்- 1/2 கிலோ
12.கறிவேப்பிலை, மல்லி, புதினா - 1 கட்டு
13.கீரை- 1 கட்டு
14.செளசெள- 1 எண்
15.நூக்கள்- 1/4 கிலோ
16.முள்ளங்கி- 1/4 கிலோ
17.வாழைக்காய்- 3 எண்
18.எலுமிச்சை- 4 எண்
மொத்தம்- ரூ.150 மட்டும்
சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் பொருட்டும், பொதுமக்கள் அதிக நேரம் காய்கறிக்காக சந்தையில் இருப்பதை குறைக்கவும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், தற்போது இம்முறைக்கு நுகர்வோர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்நாளே 50க்கும் மேற்பட்ட பைகள் விற்பனை ஆகியுள்ளன. இன்று முதல் 100 முதல் 200பைகள் இந்த முறையில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இவற்றை முறைப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT