Published : 11 Mar 2020 09:49 AM
Last Updated : 11 Mar 2020 09:49 AM
திமுகவின் பொதுச் செயலாளராக யார் நியமிக்கப்பட்டாலும் அக்கட்சியில் பூகம்பம் வெடிக்கும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் கடந்த 7-ம் தேதி உடல்நலக்குறைவாலும் வயது மூப்பாலும் மறைந்தார். இதையடுத்து, அக்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக பொருளாளராக இருக்கும் துரைமுருகன் பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் நேற்று (மார்ச் 10) நடைபெற்ற நிகச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "திமுகவில் பொதுச் செயலாளராக யாரை நியமித்தாலும் அக்கட்சியில் பூகம்பம் வெடிக்கும். ஏனென்றால் ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர், முதுபெரும் தலைவர் அன்பழகன் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார். அவரின் பதவி குறித்து யாரும் கேட்கவில்லை. அவர் மூத்தவர், முன்னவர். அவரை இனமானப் பேராசிரியர் என்றுகூட சொல்வர். 'அவர் எப்போது இனமானப் பேராசிரியராக இருந்தார், பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராகத் தானே இருந்தார்' என, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவார். அது வேறு. ஆனால், இப்போது பொதுச் செயலாளராக யாரை நியமிக்கப் போகிறீர்கள்?" என அமைச்சர் ஜெயக்குமார் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT