Published : 11 Mar 2020 09:08 AM
Last Updated : 11 Mar 2020 09:08 AM

கோடையில் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை - நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோடை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (எண்: 06005) ஏப்ரல் 8, 15, 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24, ஜூலை 1 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்தில் மாலை 4.45 மணிக்கு புறப்பட்டுமறுநாள் காலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் ஏப்ரல் 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இயக்கப்படும். இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

விரைவு ரயில் சேவை ரத்து

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட கடம்பூர் - வாஞ்சி மணியாச்சி சந்திப்பு - கங்கைகொண்டான் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில் (எண்: 16191) வரும் 15முதல் 27-ம் தேதி வரை திண்டுக்கல் - நாகர்கோவில் இடையேரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், வரும் 16 முதல் 28-ம் தேதி வரை நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயில் (16129/30) வரும் 16 முதல் 28-ம் தேதி வரை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x