Last Updated : 10 Mar, 2020 10:12 PM

1  

Published : 10 Mar 2020 10:12 PM
Last Updated : 10 Mar 2020 10:12 PM

தமிழகத்திற்கு புதிய அரசியல் கட்சி தேவையில்லை: ரஜினியை சாடிய கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை

‘‘தமிழகத்திற்கு புதிய அரசியல் கட்சிகள் தேவையில்லை’’ என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ரஜினிகாந்தின் அரசியல் ஆசை குறித்து வெகுவாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது:

தமிழருவி மணியன் சேரும் அணி எப்போதும் தேறாது. ஏனென்றால் அவரது ராசி அப்படி. மேலும் அவரது ஆலோசனைப்படி எனது நண்பர் ரஜினி செயல்பட்டால் அது தோல்வியிலேயே முடியும்.

இந்திய மக்களை பாதித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை ஆதரித்தவர் ரஜினி. அவரது கடந்த கால கருத்துகளை ஆராய்ந்து பார்த்தால் அவர் முழுக்க, முழுக்க பாஜக ஆதரவாளர் என்பது தெரியும். அந்த எண்ணத்தை மக்களிடம் மாற்றவே முஸ்லிம் உடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினிகாந்த், கட்சி, கொள்கைகளை வெளியிட்ட பிறகே அவரை இன்னும் அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியும். ஆனால், தமிழகத்திற்கு மேலும் புதிய கட்சிகள் தேவையில்லை.

பிரதமர் பெண்களிடம் ட்விட்டர் கணக்கை ஒப்படைத்தது ஒரு விளம்பர உத்திதான். உண்மையிலேயே அக்கறை இருந்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடை கொண்டு வரலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x