Published : 20 Aug 2015 08:22 AM
Last Updated : 20 Aug 2015 08:22 AM

தேசிய திறனாய்வு தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு 2015-16-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக் கும் மாணவ, மாணவிகள் விண்ணப் பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரூ.50 தேர்வுக் கட்டணத்துடன் சேர்த்து பள்ளி தலைமையாசிரியர்களிடம் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x