Published : 16 Feb 2020 08:26 AM
Last Updated : 16 Feb 2020 08:26 AM
விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் 1-ம் தேதி நடை பெறுகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி இந்நிகழ்வில் பங்கேற்று 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய சுகா தாரம் மற்றும் குடும்ப நல அமை ச்சகம் கடந்த ஆண்டு செப். 30-ம் தேதி பரிந்துரை செய்தது. அதையடுத்து, விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி அமைக்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 28 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பழுதடைந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் அகற் றப்பட்டு வருகின்றன.
இந்த இடத்தில் ரூ..380 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள், மாணவர் விடுதிகள், கலையரங்கம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மார்ச் 1-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
இதற்காக மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடம் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, விழா ஏற் பாடுகள் தொடர்பாக அனை த்துத் துறை அலுவலர்களுட னான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட் சியர் இரா.கண்ணன் முன்னி லையிலும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையிலும் நேற்று மாலை நடைபெற்றது.
அப்போது, அமைச்சர் பேசு கையில், மார்ச் 1-ம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் கலந்துகொண்டு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டுவதோடு சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதிகளுக்கு சீவல ப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தொடங்கிவைத்தும், புதிதாக கட்டப்பட்ட நகராட்சி, ஒன்றிய அலுவலக கட்டிடங்களைத் திறந் துவைத்தும், சுமார் 40 ஆயிரம் பேருக்கு பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை அனைத்து துறை யினரும் ஒருங்கிணைந்து சிறப் பாகச் செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT