Published : 18 Aug 2015 08:55 AM
Last Updated : 18 Aug 2015 08:55 AM

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்க தடை: தனியார் பள்ளிக்கு சிங்காரவேலர் குழு உத்தரவு

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்று சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு நீதியரசர் சிங்காரவேலர் குழு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்கட்டளையில் உள்ள ரவீந்திர பாரதி குளோபல் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புகார் செய்துள்ளனர். வசூலிக்கப்பட்ட அதிக கட்டணத்தை திருப்பித் தரவும், எதிர்காலத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இப்புகார் குறித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆய்வு செய்த மெட்ரிக் பள்ளி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் கே.ஸ்ரீதேவி அளித்த அறிக்கையில் அந்த பள்ளி அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் 17-வது விசாரணை நேற்று டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்றது. இது குறித்து விசாரணைக்கு வந்திருந்த ரவீந்திர பாரதி குளோபல் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரான கோபால் கூறும்போது, “இணை இயக்குநர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் பள்ளியில் உள்ள 76 ஆசிரியர்களில் 17 ஆசிரியர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. விளையாட்டுத் திடல் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் பள்ளியில் கிடையாது. வசூலித்த அதிக கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று மற்ற தனியார் பள்ளிகளுக்கு குறுகிய காலத்தி லேயே உத்தரவு கிடைத்துள்ளது. ஆனால் நாங்கள் பதினேழாவது முறையாக இந்த விசாரணைக்கு வந்திருக்கிறோம். அடுத்த முறையாவது உத்தரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்த விசாரணை குறித்து நீதி யரசர் சிங்காரவேலர் கூறியதாவது:

இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டதற்கு இரு தரப்பினருமே காரணம். 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி பள்ளிக் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இணை இயக்குநர் கே.ஸ்ரீதேவி அளித்துள்ள அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப் படுவது உண்மைதான் என்று கூறப்பட்டுள்ளது. அதன் அடிப் படையில் இனி அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கட்டணம் வசூலிப்பது குறித்து மறு பரிசீலனை செய்யுமாறு பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விண்ணப்பம் ஆகஸ்ட் 26-ம் தேதியும், அதிக கட்டணத்தை திருப்பி தர வலியுறுத்தும் பெற் றோர்களின் புகார் ஆகஸ்ட் 27-ம் தேதியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x