Published : 25 Aug 2015 10:27 AM
Last Updated : 25 Aug 2015 10:27 AM

பேருந்து மீது வேன் மோதி பெண்கள் உட்பட 5 பேர் பலி

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே முன்னால் சென்ற பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கும்பகோணம் அடுத்த வடகரை பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் 20 பேர், சென்னை புழல் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட் டத்தில் நேற்று முன்தினம் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு 10 மணி அளவில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். கும்பகோணத்தைச் சேர்ந்த மனோகர்ராஜ் என்பவர் வேனை ஓட்டி சென்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம் அச் சிறுப்பாகம் அடுத்த அரப்பேடு கிராமப் பகுதியில் சென்று கொண் டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன், சென்னை யில் இருந்து காரைக்குடி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் பின்னால் மோதியது.

இதில், வேனில் பயணித்த திரு நள்ளாரைச் சேர்ந்த ஜாக்குலின் (36) அவரது மகன் ராகுல் (10), கோவையைச் சேர்ந்த ரீனா(16), வடகரையைச் சேர்ந்த சந்தான ராஜ் என்பவரின் குழந்தை ரோகித் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த புதுக் கோட்டை ராமராஜன் (34) என்பவரும் பலியானார்.

அச்சிறுப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணித்த 6 பேர், வேனில் பயணித்த14 பேர் என மொத்தம் 20 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் மேல்மருவத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காயமடைந்தவர்கள் கூறியதாவது: நள்ளிரவு நேரம் என்பதால், வேனில் பயணித்த அனைவரும் தூங்கிவிட்டோம். அப்போது, பயங்கர சத்தம் கேட்டது. கண்விழித்து பார்த்த போது, வேன் பேருந்தின் மீது இடித்து நின்றுகொண்டிருந்தது. சிலர் படுகாயத்துடன் இறந்து கிடந்தனர். நாங்கள் கூச்சலிட்டதின்பேரில், சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் வந்து எங்களை மீட்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x