Published : 04 Feb 2020 08:15 AM
Last Updated : 04 Feb 2020 08:15 AM

தமிழகம் முழுவதும் இருந்து தஞ்சாவூர் செல்ல 250 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு பல்வேறு இடங்களில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனபோக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறிய தாவது:உலகப் புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும்சிறப்பு பேருந்துகளை இயக்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பல்வேறு இடங்களில் இருந்து தஞ்சாவூருக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அந்தந்த மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் பாதுகாப்பாகவும் சிரமமில்லாமலும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும் என்று அரசுஉத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x