Published : 02 Feb 2020 06:53 AM
Last Updated : 02 Feb 2020 06:53 AM

சித்த மருத்துவத்தில் ஐயசுரம், சந்நிபாத சுரம் என கணிப்பு?- கரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை விளம்பரங்களை நம்ப வேண்டாம்: தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் எச்சரிக்கை

சென்னை

கரோனா வைரஸ் சுரத்தை சித்த மருத்துவத்தில் ஐயசுரமாக அல்லது சந்நிபாத சுரமாக கணித்து சிகிச்சை அளிக்கலாம் என்றாலும் அறிவியல் ஆய்வு முடிகள் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது. எனவே, கரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.

உலக மக்களை கரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வரு கிறது. சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. கரோனா வைரஸால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்ச்சலின் தீவிரத்தால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந் துள்ளனர். இந்த வைரஸ் பாதிப் புக்கு அலோபதி மருத்துவத்தில் (ஆங்கில மருத்துவம்) தடுப்பு மருந்துகள் இல்லாததால், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மேலும் அதி கரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிலர் கரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்திவிட தங்களிடம் மருந்து இருப்பதாக தவறான தகவலை தெரிவித்து வரு கின்றனர். பேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங் கள் மூலமாகவும் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை தருவ தாக வேகமாக தகவல்கள் பரப்பப் பட்டு வருகின்றன. இதனால், பொது மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மருத் துவமனையின் இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி கூறியதாவது:

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இதில் உலக உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அரசும் இந்த நோய் பாதிப்பு ஏற்படா மல் இருக்க தீவிரமாக கண் காணித்து வருகிறது. இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர் களிடம் மூக்கு நீர் பாய்ச்சல், இருமல், சளி, மூச்சுவிட சிரமம், சுரம், உடல் சோர்வு போன்றவை ஏற்படுகின்றன. சில நோயாளிகள் உள்ளுறுப்பு பாதிப்பினாலும், தீவிர நுரையீரல் பாதிப்பினாலும் உயிரிழக்க நேரிடுவதாக தெரிய வந்துள்ளது.

முதியோர், குழந்தைகள்

இந்த நோயால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள வர்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோர் மிகவும் எளிதாக பாதிக் கப்படலாம். இந்நோய் பாதிக்கப் பட்டவர்கள் இருமும் போதோ, தும்மும் போதோ, இந்த வைரஸ் கிருமிகள் காற்றின் மூலம் பரவும். இந்த நோய் பாதிப்புக்குள்ளான வர்களைத் தொடுவதன் மூலமோ, அவர்களிடம் கைகுலுக்குவதின் மூலமோ மற்றவர்களுக்கு பரவக் கூடும். இருமல் மற்றும் தும்மலின் போது பரவும் நோய்க்கிருமிகள் படிந்துள்ள பொருட்களை தொடு வதன் மூலமும் கைகள் வழியாகப் பரவும்.

எனவே, நம் கைகளை அடிக் கடி சுத்தமாக கழுவுவதன் மூலமாக வும் இந்த நோய் பாதிக்கப்பட்ட வர்களிடம் இருந்து விலகி இருப் பதன் மூலமாகவும் வைரஸ் தாக்கு தலைத் தவிர்க்க முடியும். சித்த மருத்துவத்தில், எந்த வகை சுரமா னாலும், அதை 64 வகை சுரத்துக் குள் ஒன்றாக வகுக்க முடியும். அந்த வகையில், இந்த வைரஸ் சுரத்தை சித்த மருத்துவத்தில் ஐய சுரமாக அல்லது சந்நிபாத சுரமாக கணித்து சிகிச்சை அளிக்கலாம். இருப்பினும் அதற்குரிய முறை யான மருத்துவ அறிவியல் ஆய்வு கள் மேற்கொள்ளாமல் உறுதிப் படுத்த முடியாது. ஆனாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவு முறைகள், காயகல்ப மருந்துகள், சித்தர் யோகமுறைகள், ஆகியவற்றை பரிந்துரைக்கலாம்.

தினமும் இருவேளை

இந்த புதிய நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க பிரம்மானந்த பைரவம், வசந்த குசுமாகரம், திரி தோட மாத்திரை முதலியவற்றை தினமும் இருவேளை தேன் கலந்து சாப்பிடவேண்டும். அதனுடன் விஷசுர குடிநீர், கபசுர குடிநீர், நொச்சி குடிநீர் ஆகியவற்றை முறைப்படி குடிநீர் செய்து அருந் தலாம். எல்லா சித்த மருந்துகளை யும் சித்த மருத்துவரின் ஆலோ சனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தகவலுக்கு அப்பாற் பட்ட அதிகாரப்பூர்வமற்ற விளம் பரங்கள், சிகிச்சை முறைகளை மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை விலக்க வேண் டும். முறையான அரசு வழிகாட்டு தலின்படி நடந்து கொள்ளவேண் டும். இவ்வாறு டாக்டர் ஆர்.மீனா குமாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x