Published : 31 Jan 2020 07:21 AM
Last Updated : 31 Jan 2020 07:21 AM
சென்னை மாநகரப் பகுதிக்குள் தொழில் உரிமம் இன்றி தொழில் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ன் கீழ் பிரிவு 279, 287, 288, 299(1), 304, 309-ன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் புரிவோர் தொழிலுக்கேற்ப தொழில் உரிமம் பெறப்பட வேண்டியது அவசியமாகும். தொழில் உரிமமின்றி தொழில் புரிபவர்கள் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 379ஏ-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் தொழில் உரிமம் இன்றி தொழில் புரிவோர், 7 நாட்களுக்குள் தொழில் உரிமம் பெற விண்ணப்பித்து, மாநகராட்சியின் மேல் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT