Published : 22 Jan 2020 07:50 AM
Last Updated : 22 Jan 2020 07:50 AM

பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்: பிப். 2-வது வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்

சென்னை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, முகவரி மாற்ற, திருத்தம் செய்ய இன்று கடைசிநாளாகும். பிப்ரவரி 2-ம் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தமிழக தேர்தல் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் கடந்த டிச.23-ம் தேதியில் இருந்து நடந்துவருகிறது. அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 ஆண்கள், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பெண்கள், 5 ஆயிரத்து 924 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர்.

சிறப்பு முகாம்கள்

இந்நிலையில், டிச.23-ம் தேதி வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடங்கின. ஜனவரி 1-ம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இதுதவிர பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கடந்த ஜன.4, 5 மற்றும் 11, 12 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில், 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 11 லட்சத்து 87 ஆயிரத்து 10 பேரும், பெயர் நீக்கம் செய்வதற்கு 82 ஆயிரத்து 826 விண்ணப்பங்களும், திருத்தம் மேற்கொள்வதற்கு 1 லட்சத்து 9 ஆயிரத்து 944 மனுக்களும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 93 ஆயிரத்து 589 மனுக்களும் என மொத்தம் 14 லட்சத்து 73ஆயிரத்து 370 மனுக்கள் பெறப்பட்டன.

இதுதவிர, என்விஎஸ்பி இணையதளம், கைபேசி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது தாலுகா அலுவலகம், வாக்காளர் பதிவு அதிகாரியிடம் நேரடியாக மனுவை பெற்று உரிய ஆவணங்களை அளித்துஜன.22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய இன்று இறுதிநாளாகும். இன்று மாலை வரை, கைபேசி செயலி, இணையதளம் மட்டுமின்றி, தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

நாளை முதல் மனுக்கள் பரிசீலனை

தொடர்ந்து, இரு முகாம்கள் மற்றும் நேரடியாக இதர பணி நாட்களில் பெறப்படும் மனுக்கள், ஆன்லைன் மூலம் பெறப்படும் மனுக்கள் ஜன.22-ம் தேதிக்குப்பின் பரிசீலிக்கப்பட்டு, பிப் 2-ம் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலான தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. இரு முகாம்கள் மற்றும் நேரடியாக இதர பணி நாட்களில் பெறப்படும் மனுக்கள், ஆன்லைன் மூலம் பெறப்படும் மனுக்கள் ஜன.22-க்குப்
பின் பரிசீலிக்கப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x