Last Updated : 21 Jan, 2020 12:14 PM

2  

Published : 21 Jan 2020 12:14 PM
Last Updated : 21 Jan 2020 12:14 PM

அரசியலில் சிரஞ்சீவி மாதிரி ரஜினி ஆகிவிடக் கூடாது: இயக்குநர் விக்ரமன்

தூத்துக்குடி

அரசியலில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மாதிரி ரஜினியும் ஆகிவிடக் கூடாது என இயக்குநர் விக்ரமன் கூறினார்.

முன்னதாக இயக்குநர் விக்ரமன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எல்லா துறையைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வரும்போது நடிகர்கள் மட்டும் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என எதிர்க்கிறார்கள் என்றுத் தெரியவில்லை. அரசியலில் சினிமாக்காரர்கள் சாதித்தது இல்லையா? எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர், ஜெயலலிதா எல்லோரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தானே.

ரஜினி அரசியலுக்கு வருவதற்குக் காட்டப்படும் எதிர்ப்பு அவருக்கு இருக்கும் மாஸ் தான் காரணம். ஆந்திராவில் சிரஞ்சீவி அரசியல் பிரவேசம் அறிவித்தபோதும் இத்தகைய எதிர்ப்பு கிளம்பத்தான் செய்தது.

ஆனால், ரஜினி அரசியலில் சிரஞ்சீவி போல் ஆகிவிடக்கூடாது. அரசியலில் தாக்குப்பிடிக்க வேண்டும். ரஜினி அரசியலில் எப்படி தடம்பதிப்பார் என்பதை எல்லாம் நாம் இப்போதே சொல்ல முடியாது.

ரஜினி மீதான சமீபத்திய எதிர்ப்பைப் பார்க்கும்போது மீடியாக்கள் தான் அவரது பேச்சை சர்ச்சையாக்கி விடுகின்றனவோ என்று தோன்றுகிறது" என்றார்.

தொடர்ந்து படங்கள் இயக்காதது ஏன் என்ற கேள்விக்கு, "என் மனைவிக்கு உடல் நலன் சரியில்லை. இயக்கம் என்பது மகிழ்ச்சியான மனநிலையில் நடக்க வேண்டும். என் மனைவி குணமானதும் மீண்டும் இயக்கத்தை ஆரம்பிப்பேன்" என்று கூறினார். சூப்பர் குட் ஃபில்ம்ஸ் போன்ற படத்தயாரிப்பு நிறுவனங்களை தன்னை படம் இயக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x