Published : 16 Jan 2020 12:34 PM
Last Updated : 16 Jan 2020 12:34 PM
பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் செல்போனை பார்த்தபடியே நீண்ட தூரமாக பேருந்தை ஓட்டிச் செல்லும் வீடியோ காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. பயணிகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது அவர் செய்த செய்கைக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறை செல்லக்கூடிய தனியார் பேருந்தை நேற்றைய தினம் (ஜன.15) ராமகிருஷ்ணன் என்ற ஓட்டுனர் ஓட்டிச் செல்லும்போதே இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
ஓட்டுநர் ராமகிருஷ்ணன் தனது செல்போனை பார்த்தபடி தொடர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேலாக பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
ஓட்டுநரின் அலட்சியமான போக்கால் அச்சமடைந்த பயணிகள் அவரைக் கண்டித்துள்ளனர். ஆனால், பயணிகள் எவ்வளவோ கண்டித்தும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் ராமகிருஷ்ணன் கையில் ஆண்ட்ராய்ட் செல்போனை வைத்துக்கொண்டு பேஸ்புக், வாட்ஸ்ஆப் பார்த்தபடி பேருந்தை தொடர்ந்து ஓட்டியுள்ளார்.
அப்போது பயணிகளில் ஒருவர் ஓட்டுநரின் செயலை செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஓட்டுனரின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்தார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பயணிகளின் உயிரைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் பேருந்தை அஜாக்கிரதையாக இயக்கிய ஓட்டுநர் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT