Published : 13 Jan 2020 09:22 AM
Last Updated : 13 Jan 2020 09:22 AM

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழின் 100-வது ஆண்டு விழா கொண்டாட்டம்; தாய்மொழியை நாம் ஒருபோதும் மறக்க கூடாது: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

சென்னை

தாய்மொழியை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. தாய்மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண் டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தமிழ் மாத இதழின் 100-வது ஆண்டு கொண்டாட்டத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கிவைத்தார்.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ என்ற தமிழ் மாத இத ழின் (1921-2020) 100-வது ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்க விழா சென்னை நாரத கான சபாவில் நேற்று நடைபெற்றது.

இதில், குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழின் டிஜிட்டல் பதிப்பை தொடங்கி வைத்தும், இதழின் 100-வது கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:

விவேகானந்தர் பிறந்த நாளில், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தமிழ் மாத இதழின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் தொடக்க விழா நடைபெறுவது சிறப்பாகும். விவே கானந்தர் மிகப்பெரிய சமூக சீர்த் திருத்தவாதியாகத் திகழ்ந்தார். அவரது உயரிய கொள்கைகளை இளைஞர்கள் பயன்பெறும் வகை யில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

விவேகானந்தர் பிறந்த நாள் சர்வதேச இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் 65 சதவீத பேர் இளைஞர்களாக உள்ளனர். அவர்கள் 35 வயதுக்கு கீ்ழ் உள்ளவர்களாக இருப்பது சிறப்பு. இளைஞர்களின் உடல் மற்றும் உள்ளம் நலம் பெறுவ தற்கு யோகா செய்ய வேண்டும். யோகா செய்வது மோடிக்காக அல்ல. நமது பாடிக்காக (Body) என்பதை உணர வேண்டும். நம் நாட்டில் பிறந்த யோகாவை பிரத மர் மோடிதான் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றார். ஒவ்வொருவரும் ஏதாவது உடற் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

எல்லா மதங்களும் மகத்தா னவை. வெளிநாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையினரை ஏற் றுக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். ஆனால், அதை சிலர் எதிர்க்கின்றனர். மதச்சார்பின்மை என்பது நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. அதன்பிறகு வந்ததுதான் அரசியல் அமைப்புச் சட்டம். எல்லா மதங்களும் முக்கிய மானவைதான். இந்து என்றால் சிலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. அவ்வாறு நினைக்க அவர்களுக்கு உரிமை இருந்தாலும், அது சரியானது அல்ல.

நாம் ஒருபோதும் தாய் மொழியை மறக்கக்கூடாது. எத் தனை மொழிகளை வேண்டுமானா லும் கற்கலாம். ஆனால், தாய் மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். சைவமோ அல்லது அசைவமோ எதைச் சாப்பிட்டாலும் சத்தானதாக இருக்க வேண்டும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

முன்னதாக, ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தர் பேசும் போது, “இந்து சனாதன தர்மம் பற்றி கற்பிக்கவும், அதுதொடர் பாக பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்துவதிலும் ‘ஸ்ரீராம கிருஷ்ண விஜயம்’ தமிழ் மாத இதழ் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்து கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை வீடுதோறும் கொண்டு சேர்த்து ஒவ்வொருவரை யும் நல்லொழுக்கம் உள்ளவராக உருவாக்கும் பணியில் இந்த இதழ் பெரிய சாதனையை செய் திருக்கிறது” என்றார்.

விழாவின் தொடக்கத்தில், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத் தின் மேலாளர் சுவாமி விமூர்த் தானந்தர் வரவேற்றார். நிறைவில், விவேகானந்தா கல்லூரி செய லாளர் சுவாமி சுகதேவானந்தர் நன்றி கூறினார். இவ்விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தாய்மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x