Published : 12 Jan 2020 07:43 AM
Last Updated : 12 Jan 2020 07:43 AM

தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்து இலங்கையுடன் பேச்சு நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு விக்னேஷ்வரன் வலியுறுத்தல்

உலகத் தமிழர் திருநாள் 6-ம் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் சிறப்பு மலரை வெளியிட்டார். உடன், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், மேற்கு நியு பிரிட்டன் மாகாண அரசின் மத்திய அமைச்சர் சுசீந்திரன் முத்துவேல், டாக்டர் பத்மபிரியா, உலக தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் ஜெ.செல்வக்குமார் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

தமிழர்களுக்கு இரட்டை குடி யுரிமை வழங்குவது குறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி யில் உள்ள கலைவாணர் அரங் கில் உலக தமிழர் திருநாள் 6-ம் ஆண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவம், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன், விஐடி பல் கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் பங்கேற்று உரை யாற்றினர்.

நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கி உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசும்போது, “தமிழ் மொழி பல பரிமாணங் களைக் கடந்து காலத்தை வென்று நிற்கிறது. உலகத்தில் உள்ள 235 நாடுகளில் 144 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை வளர்க்க அதை மதிப்பெண்ணுக்காக மட்டும் படிக்காமல் அதன் பெருமைகளை தெரிந்து மொழிப்பற்றுடன் கற்க வேண்டும்” என்றார்.

இலங்கை வடக்கு மாகாண முன் னாள் முதல்வர் க.வி.விக்னேஷ் வரன் பேசும்போது, “இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் மக்களின் எண் ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துள்ளது.

எதிர்காலத்தில் தமிழர்கள் என்ற ஓர் இனத்தினர் வாழ்ந்தார்களா என்று தடயத்தை தேடும் நிலை ஏற்படும். இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவது இந்தியாவுக்கும் ஆபத்தானது. எனவே, தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன் வர வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக் கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் பேசும்போது, “உலகம் முழுவதும் இருக்கும் உண்மையான தமிழர் களின் எண்ணிக்கையைக் கண் டறிய வேண்டும். தமிழகத்தில் தமிழைப் பாதுகாக்க வேண்டும். வெளிநாடுகளில் தமிழை வளர்க்க வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் க.வி.விக் னேஷ்வரனிடம், இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்து சர்வ தேச விசாரணை நடத்தப்படாமல் உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “சர்வதேச விசாரணை காலதாமதமாவதற்கு இலங் கைக்கு தொடர்ந்து அவகாசம் கொடுத்து வருவதுதான் காரணம். சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்" என்றார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண் டும் என்று கூறுவதற்கு காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இலங்கை தமிழ் மக்கள் அவர்களுடைய நாட் டுக்கே திரும்பி வர வேண்டும் என்பது எங்களுடைய கருத்தாக இருந்தாலும், பல்வேறு தொடர்பு கள் காரணமாக அவர்கள் இந்தி யாவுக்கு வரும்போது இரட்டை குடியுரிமை இருந்தால் மட்டுமே அவர்களால் பலன்களை அனு பவிக்க முடியும். எனவே, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடி யுரிமை என்பது முக்கியமானது.

இதுதொடர்பாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையே ஒப்பந்தங்கள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். எனவே, இதுகுறித்து இலங்கை அரசாங்கத்திடம் இந்திய அரசு பேச வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x