Published : 12 Jan 2020 07:40 AM
Last Updated : 12 Jan 2020 07:40 AM
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் ஜன. 22-ம் தேதி கடைசி நாளாகும். ஜன.4 மற்றும் 5-ம் தேதிகளில் நடை பெற்ற முதல்கட்ட சிறப்பு முகாம் களில் 6.97 லட்சம் பேர் தங்கள் பெயரை சேர்ப்பதற்காக விண்ணப் பித்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 2 கோடியே 96 லட் சத்து 46 ஆயிரத்து 287 ஆண்கள், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயி ரத்து 118 பெண்கள், 5 ஆயிரத்து 924 மூன்றாம் பாலினத்தவர் என 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் தற்போது உள்ள னர். அதிகபட்சமாக சோழிங்கநல் லூர் தொகுதியில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 73 வாக்காளர் களும், குறைந்தபட்சமாக துறை முகம் தொகுதியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்களும் இருந்தனர்.
பெயர் நீக்கம், முகவரி மாற்றம்
இதைத்தொடர்ந்து ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிறைவடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கலாம். இதுதவிர பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில், முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 6 லட்சத்து 97 ஆயிரத்து 668 பேரும், பெயர் நீக்கம் செய்வதற்கு 36 ஆயிரத்து 704 பேரும், திருத்தம் மேற்கொள்வதற்கு 58 ஆயிரத்து 828 பேரும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 45 ஆயிரத்து 887 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 39 ஆயிரத்து 87 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இறுதிக்கட்ட முகாம்
இதைத்தொடர்ந்து 2-ம் மற்றும் இறுதிக்கட்ட முகாம் நேற்று தொடங்கி இன்றும் நடக்கிறது.
இதுதவிர, வரும் 22-ம் தேதி வரை என்விஎஸ்பி இணைய தளம், கைபேசி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது தாலுகா அலுவலகம், வாக்கா ளர் பதிவு அதிகாரியிடம் நேரடியாக மனுவை பெற்று உரிய ஆவணங் களை அளித்தும் விண்ணப்பிக் கலாம்.
இதில், புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கும்போது அவர் களின் பிறப்புச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரு முகாம்கள் மற்றும் நேரடியாக இதர பணி நாட்களில் பெறப்படும் மனுக்கள், ஆன்லைன் மூலம் பெறப்படும் மனுக்கள் ஜன.22-ம் தேதிக்குப்பின் பரிசீலிக் கப்பட்டு, வரும் பிப்.2-ம் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT