Published : 12 Jan 2020 06:48 AM
Last Updated : 12 Jan 2020 06:48 AM
தமிழகத்தில் உள்ள 27 மாவட் டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வென்றது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங் களில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகள் உள்ளன. இப்பதவி களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தம் 514 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 5 ஆயிரத்து 87 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளிட்ட மொத்தம் 91 ஆயிரத்து 908 பதவிகளில் வெற்றிபெற்றோர் அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 27 மாவட்டங்களில் உள்ள 27 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகள், 27 துணைத் தலைவர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிகள், 314 துணைத் தலைவர் பதவிகள், 9 ஆயிரத்து 618 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 300 உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது.
சில இடங்களில் அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே பிரச்சினை கள் ஏற்பட்டன. சில ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வரவில்லை. திருவள்ளூர் மாவட் டத்தில் 4 ஒன்றியங்களில் வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பங் கேற்கவில்லை. சில ஒன்றியங்களில் போதிய உறுப்பினர்கள் வர வில்லை. தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி பல் வேறு இடங்களில் சாலை மறியல் கள் நடைபெற்றன. இப்பிரச் சினைகள் காரணமாக 24 ஒன்றி யங்களில் நடைபெற இருந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர் தல்கள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக பெரும்பான்மை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களைப் பெற் றிருந்தும், காங்கிரஸ் ஆதரவுடன் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக் கன்பாளையம் ஒன்றியத்தில் 7 வார்டுகளில் திமுக கூட்டணி, 3 வார்டுகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்த நிலையில், அதிமுக உறுப்பினர் வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்ற தால் அங்கு தேர்தல் நிறுத்தப் பட்டது.
நீலகிரி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பொன்தோஸ் தேர்வு செய் யப்பட்டார். இந்த தேர்தலில்தான் முதல்முறையாக இம்மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. அதனடிப்படையில் முதல் முறையாக பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியத்தில் தேர்தல் அதிகாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அங் கும், மங்களூர் ஒன்றியத்தில் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்ய அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாலும் அவ் விரு இடங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வெற்றி அறிவிப்பு ரத்து
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப் பட்டு, திமுகவைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் வெற்றி பெற்றதாக வெளியான அறிவிப்பு, நேற்று மாலை ரத்து செய்யப்பட்டது.
'பவுன்சர்'கள் கைது
சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் 29 வார்டுகளில் 18-ல் வெற்றி பெற்றிருந்த அதிமுக, 4 வார்டுகளில் வெற்றிபெற்ற பாமக-வுக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தது. இம்மாவட் டத்துக்கு உட்பட்ட அயோத்தியாப் பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில், திமுக ஆதரவு கவுன்சிலர்களை, ‘பவுன்சர்கள்’ போன்ற பாதுகாவ லர்கள் அழைத்து வந்திருந்தனர். ஆனால், 10-க்கு 9 என்ற வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. அப்போது, போலீ ஸாருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்ட பவுன்சர்கள் கைது செய் யப்பட்டதால் பதற்றம் ஏற் பட்டது.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாகக் கூறி மற்றொரு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றார். இதனால் 2 மணி நேரம் தாமதத்துடன் தேர்தல் நடந்தது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் அதிமுக, திமுக.வினரிடம் ஏற்பட்ட தகராறின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி வெங்கடேசனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வத்திராயிருப்பில் திமுக-அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒன்றிய அலுவலகம் சூறையாடப்பட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் அதிமுக, திமுக தலா 8 வார்டுகளில் வென்றிருந்தது. அதிமுக தரப் பினர் வராததால் போதிய எண்ணிக்கை இல்லாமல் தேர் தல் தள்ளி வைக்கப்பட்டது.
இறுதியாக தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் அதிமுக 13 மாவட்டங்களிலும், அதன் கூட் டணி கட்சியான பாமக ஒரு மாவட் டத்திலும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை வென்றுள்ளன.
திமுக 12 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 314 ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 140 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான பாமக 7 இடங் களிலும், பாஜக 3 இடங்களிலும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலை வர் பதவிகளைப் பிடித்துள்ளன. திமுக கூட்டணியில் திமுக 125 இடங் களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளன. 2 இடங்களில் அமமுகவும், 2 இடங்களில் சுயேச்சைகளும் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். 27 ஒன்றியங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் உள்ள 26 பதவிகளில், அதிமுக 7 இடங்களிலும், திமுக 11 இடங் களிலும், பாமக 3 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும் பெற்றிபெற்றன.
இதேபோல் 314 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளில், 41 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. மீதமுள்ள 273 பதவிகளில், திமுக 107, அதிமுக 94, பாமக 19, காங்கிரஸ் 8, தேமுதிக 7, அமமுக 5, பாஜக 4, இந்திய கம்யூனிஸ்ட் 3, சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 25 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT