Published : 09 Jan 2020 07:00 AM
Last Updated : 09 Jan 2020 07:00 AM

போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர்களை எரித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை

சென்னை

போகி பண்டிகையின்போது, காற்று மாசுவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார்.

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந் துள்ளனர். அவர்கள் வைக்கோல் போன்ற இயற்கையான பழைய பொருட்களை எரித்து வந்ததால் காற்று மாசுபடாமல், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்து வந்தது. அண்மைக் காலமாக செயற்கையாக தயாரிக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதிக புகையை வெளிப்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் டயர்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு உடல்நலக்குறைவு, வாகன போக்குவரத்து பாதிப்பு, விமான சேவை பாதிப்பு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சுற்றுச்சூழலை பாதிக் காத வகையில் போகி பண்டி கையை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிண்டியில் நேற்று நடைபெற்றது. அதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தையும் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

போகி பண்டிகையின்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளை விக்கும் வகையில் டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போகி பண்டிகை யின்போது சென்னை மாநகரில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் வகையில் போகி பண்டிகைக்கு முந்தைய நாள், போகி பண்டிகை அன்று 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரம் கண்காணிக் கப்பட உள்ளது. அதன் விவரங் கள் இணையதளத்திலும் வெளி யிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பேசும்போது, போகி பண்டிகையின்போது, காற்று மாசு ஏற்படுத்தும் பொருட்கள் எரிப்பதை தடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சம்பு கல்லோலிகர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.வி.வெங்கடாசலம், உறுப்பினர் செயலர் டி.சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x