Published : 06 Jan 2020 02:49 PM
Last Updated : 06 Jan 2020 02:49 PM
சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. கூட்டம் முடிந்த பின்னர் எத்தனை நாட்கள் சபையை நடத்துவது என்பது குறித்து அலுவல ஆய்வுக்குழு கூடி முடிவெடுத்தது. அதன்படி 7,8,9 ஆகிய 3 நாட்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
3 நாட்களும் என்னென்ன நிகழ்ச்சிகள் உள்ளன என்பது குறித்த விவரம்:
7-01-2020 செவ்வாய்க்கிழமை: காலை 10 மணிக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல்.
இரங்கல் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. விவாதம் தொடங்குதல்.
மாலை 5 மணிக்கும் சட்டப்பேரவை கூடும்.
8-01.2020 புதன்கிழமை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. விவாதம் தொடங்குதல். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுநர் உரைமீது கருத்துகளை வைத்தல்.
9-01-2020 - வியாழக்கிழமை
1. 2019-20 ஆம் ஆண்டின் இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையைப் பேரவைக்கு அளித்தல்.
2. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் பதிலுரை.
3. 2019-20 ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு.(விவாதமின்றி).
4. 2019- 2020 ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்காக இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்து நிறைவேற்றுதல் விவாதமின்றி.
5. சட்ட முன் வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும்.
6. ஏனைய அரசினர் அலுவல்கள்.
பேரவை வழக்கம் போல் காலை 10 மணிக்குக் கூடும். நாளை (7/ 1/ 2020) அன்று மாலை 5 மணிக்கும் பேரவை கூடும்.
இவ்வாறு சட்டப்பேரவை அலுவலக நிகழ்ச்சி நிரல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT