Published : 04 Jan 2020 08:31 AM
Last Updated : 04 Jan 2020 08:31 AM
ஆம்பூர் அருகே பிரசவ வலியுடன் இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு வயல்வெளியில் பிரசவம் நடை பெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சிலம் பரசன் (26). இவரது மனைவி சோனியா (22). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், 3-வது முறையாக சோனியா கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான சோனியாவுக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே, அவரது மாமியார் அமுதா, தன் உறவினரை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சோனியாவை நரியம் பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, ரகுநாதபுரம் என்ற இடத்தில் சென்றபோது சோனியாவுக்கு பிரசவவலி அதிகமானது.
உடனே, இரு சக்கர வாகனத்தை நிறுத்திய சோனியாவின் உறவினர் அங்கு வயல் வெளியில் வேலை செய்து வந்த கிராம பெண்களை உதவிக்கு அழைத்தார். உடனே, விவசாய கூலி வேலை செய்து வந்த பெண்கள் வேலையை நிறுத்தி விட்டு சோனியாவை வயல் வெளிக்கு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
பிறகு, சோனியாவை சுற்றிலும் சேலையை தடுப்பாக கட்டிய பெண் கள் அங்கு அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதற்கிடையே, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்குள்ளாக சோனியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததும் சோனியா மற்றும் பெண் குழந்தை ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அங்கிருந்து நரியம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். வயல்வெளியில் இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கிராம பெண்களுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.சோனியாவை சுற்றிலும் சேலையை தடுப்பாக கட்டிய பெண்கள் அங்கு அவருக்கு பிரசவம் பார்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT