Published : 03 Jan 2020 08:23 AM
Last Updated : 03 Jan 2020 08:23 AM

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கோவை மண்டலத்தில் திமுக முன்னிலை

கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட பி.கணேசன், 893 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சூலூரில் அவரை தூக்கி கொண்டாடும் ஊர் மக்கள்.படம் : ஜெ .மனோகரன்

கோவை

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் ஒரு வார்டுக்கு மட்டுமே முடிவு அறிவிக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையத்தில் (வார்டு 6) திமுக-வைச் சேர்ந்த கார்த்திக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். மொத்தமுள்ள 155 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் அதிமுக 23, திமுக 17, சுயேச்சை 2, தேமுதிக ஒரு வார்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 17மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இரவு 8 மணி வரை வெற்றிநிலவரம் எதுவும் அறிவிக்கப்பட வில்லை. மொத்தமுள்ள 170 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் அதிமுக 17, திமுக 30, பிற கட்சிகள் 8 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 6-வது வார்டில் திமுக-வைச் சேர்ந்த வனஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மொத்தமுள்ள 59 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் அதிமுக 7, திமுக 24, பிற கட்சிகள் 4 வார்டுகளில் வெற்றிபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x