Last Updated : 31 Dec, 2019 04:32 PM

1  

Published : 31 Dec 2019 04:32 PM
Last Updated : 31 Dec 2019 04:32 PM

பெருகி வரும் பொருளாதார நெருக்கடி: கிரண்பேடி அறிவுறுத்தல் 

புதுச்சேரி

பெருகி வரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க வருவாயைப் பெருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் வரும் ஆண்டிலுள்ள சவால்கள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''புத்தாண்டில் புதுச்சேரிக்கு உள்ள முக்கிய சவால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி கீழ்மட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது அவசியம்.

குப்பைகளை செல்வமாக மாற்றுதல் மற்றும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகப்படுத்துதல். விவசாயத்தில் நீர் சேமிப்பு முறைகளை கொண்டு வரவேண்டும்.

பள்ளிகளில் தாய்மொழி மற்றும் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வைக்க வேண்டும். உயர் கல்வியில் காலியாக உள்ள இடங்களை நிரம்ப வேண்டும். அரசுப் பணிகளில் உள்ள தேக்க நிலையைக் களைந்து தேவையான நேரடி நியமனங்கள் செய்து பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

பெருகி வரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க வருவாயைப் பெருக்க வேண்டும். குறிப்பாக கலால், ஜிஎஸ்டி கேபிள் டிவி வரி மற்றும் கழிவு நீர் இணைப்பில் வருவாயை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி நிலுவையைத் தர முடியும்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மக்கள் தலைக்கவசம் அணிவதையும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதையும் உறுதிப்படுத்த மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்தவேண்டும்''.

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x