Published : 31 Dec 2019 03:56 PM
Last Updated : 31 Dec 2019 03:56 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பி., ஆகியோர் இன்று மனு அளித்து வலியுறுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்குட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் காலை தொடங்குகிறது.
இந்நிலையில், இன்று திமுக மாநில துணைப்பொதுச்செயலார் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., தலைமையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் மற்றும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி ஆகியோர்திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமியை சந்தித்து வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வலியுறுத்தி மனுஅளித்தனர்.
இதையடுத்து திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நடந்திடவேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் உடனடியாக வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கவேண்டும்.
எந்தவகையிலும் தாமதம் கூடாது. ஒவ்வொரு சுற்றுக்களிலும் எண்ணப்படும் வாக்குகள் அறிவிக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் வாக்கு எண்ணிக்கையின் மறுநாள் ஊராட்சித்தலைவர், உறுப்பினர்களுக்கு காலையிலோ அல்லது ஊராட்சி அலுவலகங்களிலோ சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். சிறுதவறுக்குக்கூட இடங்கொடுக்காமல் வாக்கு எண்ணிக்கையை நடத்துவதாக ஆட்சியர் எங்களிடம் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT