Published : 30 Dec 2019 12:46 PM
Last Updated : 30 Dec 2019 12:46 PM
மதுரை கள்ளிக்குடியில் வில்லூர் வாக்குச்சாவடியில் 100 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்தார். மதுரை மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 25.06% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மதுரை மாவட்டத்தில், கடந்த டிச. 27-ல் மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், வைகை ஆற்றுக்குத் தென்பகுதியிலுள்ள திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு இன்று (டிச.30) தேர்தல் நடைபெறுகிறது.
கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்லூர் வாக்குச்சாவடிக்கு 100 வயதை எட்டிய சீனியம்மாள் வாக்களித்தார். அவரை அவரது உறவினர்கள் வீல் சேரில் வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்தனர்.
100 வயது மூதாட்டி ஜனநாயகக் கடமையாற்ற வந்தது மற்றவர்களுக்கு உற்சாகமாக அமைந்தது.
மதுரையில், காலை 11 மணி நிலவரப்படி 25.06% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக உசிலம்பட்டி ஒன்றியத்தில் 27.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஒன்றியம் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
திருப்பரங்குன்றம்- 21.78% .
உசிலம்பட்டி- 27.08%
செல்லம்பட்டி- 23.93% .
சேடபட்டி- 21.10%
திருமங்கலம்- 29.46%
டி.கல்லுப்பட்டி- 26.49%
கள்ளிக்குடி- 29.64 %
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 5,71,072.
தற்போது வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை: 1,43,101.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT