Published : 30 Dec 2019 10:20 AM
Last Updated : 30 Dec 2019 10:20 AM
"அதிகார, பண பலத்தால் தவறுகள் செய்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற நினைக்கிறது. இது ஒரு நாகரிகமான தேர்தல் என நான் கருதவில்லை" என்று காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ வும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழுத் தலைவருமான கே.ஆர் ராமசாமி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ வும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர் ராமசாமி கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கப்பலூர் தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உள்ளாட்சித் தேர்தல் நடப்பதை வரவேற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே சமயத்தில் ஆளும் கட்சி சின்னங்கள் ஒதுக்குவதில், வாக்குச்சாவடி எண்களை மாற்றுவது போன்ற தவறுகளை செய்கிறது.
இதற்கெல்லாம் காரணம் அவர்களிடம் அதிகமாக உள்ள பணபலம். உள்ளாட்சித் தேர்தலில் பணபலத்தை வைத்து வெற்றி பெறலாம் என்று நம்புகின்றனர்.
ஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
இதை ஒரு நாகரிகமான தேர்தலாக நான் கருதவில்லை. அதிமுகவிற்கு வாக்களிக்க வில்லை என்று வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைத்து கொளுத்துகின்றனர். அவர்களை எதிர்க்கும் மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இல்லவே இல்லை" என்றார்.
கோலம் போட்டால் கைதா?
சென்னையில் என்.சி.ஆர், சிஏஏ-வை எதிர்த்து கோலம் வரைந்த பெண்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்த அவர், "பெண்கள் போட்ட கோலங்கள் அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நாட்டிற்கு துரோகம் செய்யவோ நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ அவர்கள் நடந்து கொள்ளவில்லை. அவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் கோலமிட்டதற்காக அவர்களை கைது செய்துள்ளனர் இந்த அரசு யாரை எந்த நேரத்தில் கைது செய்வார்கள் என்று தெரியவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT