Last Updated : 29 Dec, 2019 11:23 AM

 

Published : 29 Dec 2019 11:23 AM
Last Updated : 29 Dec 2019 11:23 AM

திமுக பிரமுகருக்கு சொந்தமான பங்களாவில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 

கோவை

கோவை வடவள்ளி லட்சுமிநகரில் திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு ஷேக், ரஷீத் ஆகியோர் வாடகைக்கு தங்கியுள்ளனர்.

இவர்கள் தங்களிடம் தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 ம் மதிப்புள்ள நோட்டுகள் இருப்பதாகவும், புதிய நோட்டு ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் அதற்கு பதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பழைய நோட்டு தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அடிக்கடி நிறைய பேர் அங்கு வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய புலனாய்வு பிரிவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாருக்கு தகவல் தெரிவித்து அலர்ட் செய்தனர்.

அவரது உத்தரவின் பேரில் டிஎஸ்பி வேல்முருகன், ஆய்வாளர் மணிவண்ணண் தலைமையிலான வடவள்ளி காவல்துறையினர் நேற்று (சனிக்கிழமை) மாலை முதல் நள்ளிரவு வரை அந்த பங்களாவில் ரகசிய சோதனை நடத்தினர்.

இதில் அந்த பங்களாவில் உள்ள அறைகளில் இருந்து 268 கட்டுகள் பழைய ரூ.500, ரூ.1000ம் தாள்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் ரூ. 2.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலுல் பல கட்டுகளில் மேலே முதல் தாள் மற்றும் கடைசி தாள்களில் பழைய 500, 1000ம் ரூபாய் நோட்டுகளும் அதன் இடையே காகித தாகள்கள் வைக்கப்பட்டு இருந்த கட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.

அங்கு இருந்த இருவரும் தப்பி விட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த பழைய நோட்டு கட்டுகள் யார் கொடுத்தது, அவர்களுடையதா, இதுவரை எவ்வளவு மாற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x