Published : 29 Dec 2019 10:42 AM
Last Updated : 29 Dec 2019 10:42 AM
ஆங்கிலப் புத்தாண்டு கொண் டாட்டத்தில் விதிகளை மீறும் ஹோட் டல் நிர்வாகங்கள், பந்தயங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீதுகடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித் துள்ளனர்.
ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகை நெருங்குவதையடுத்து, நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், கேளிக்கை மையங்களின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. மாநகர காவல் துணைஆணையர்கள் பாலாஜி சரவணன் (சட்டம் ஒழுங்கு), முத்தரசு (போக்குவரத்து) ஆகியோர் பேசினர்.
துணை ஆணையர் பாலாஜி சரவணன் பேசும்போது, ‘‘கடந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்ட சமயத்தில், மாந கரில் நடந்த விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். நடப்பு ஆண்டு விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தாண்டு சமயத்தில் மாநகரில் 1,400 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை மையங்களின் நிர்வா கத்தினர், தங்களது விதிமுறை களை மீறக்கூடாது.
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முழுவதுமாக வீடியோ மூலமாக பதிவு செய்ய வேண்டும்.நீச்சல் குளம் மீது மேடை அமைத்தோ, அதற்கு அருகேஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிக ளையோ நடத்தக்கூடாது. ஆபாசநடனங்கள் நடத்தக்கூடாது. சம்பந்தப்பட்ட ஹோட்டல், விடுதி,கேளிக்கை மைய நிர்வா கத்தினர் பெண்கள் பாதுகாப்புக்குஉரிய நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படு வோர் மீது சட்டப்படி உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். காவலன் செயலியை பெண்கள் பதிவிறக்கம் செய்து, ஆபத்து காலங்களில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்’’ என்றார்.
துணை ஆணையர் முத்தரசு பேசும்போது, ‘‘நட்சத்திர ஹோட்ட ல்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை மையங்கள் ஆகியவற்றின் நிர்வாகத்தினர், தங்கள் இடத்துக்கு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வருபவர்களின் வாகனங்களை நிறுத்தபோதிய ஏற்பாடு செய்து இருக்கவேண்டும். சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. ஜி.பி.சிக்னல், விமான நிலையம் சந்திப்பு, ஜே.எம்.பேக்கிரி சந்திப்பு, சுங்கம், ராமநாதபுரம், லாலி சாலை,சிவானந்தா காலனி ஆகிய 7 இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தப்படும். சட்டம் - ஒழுங்கு போலீஸார், போக்கு வரத்து போலீஸார் இணைந்து தணிக்கையில் ஈடுபடுவர்.
வாகனத்தின் ஸ்டேன்டை சாலையில் உரசி நெருப்புப் பொறி ஏற்படுத்துவது, பேரிகார்டர் உள்ளிட்ட பொருட்களை இழுத்துச் சென்று நெருப்புப் பொறி ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல் களில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பந்தயத்தில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அவிநாசி சாலையில் ஜே.எம்.பேக்கிரி முதல் விமான நிலைய சந்திப்பு வரை ஒரு சில இடங்களை தவிர, மற்ற அனைத்து திரும்பும் பகுதிகளும் இரவு முதல் காலை வரை அடைக்கப்படும். அவிநாசி சாலை அண்ணா மேம்பாலம், வடகோவை மேம்பாலம், நஞ்சப்பா சாலையிலுள்ள மேம்பாலம் உள்ளிட்டவற்றில் இரவு முதல் காலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT