Published : 28 Dec 2019 09:13 AM
Last Updated : 28 Dec 2019 09:13 AM
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக அறநிலையத் துறை ஆணையர் கே.பணீந்திர ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது பணியாற்றிவரும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கென தனியாக சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக இருந்த டேவிதார் ஓய்வுபெற்ற நிலையில், வணிகவரித் துறை ஆணையராக இருந்த டி.வி.சோமநாதன் புதிய தலைவராக செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில் அவர், மத்திய அரசின் நிதித் துறை செலவினப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டதால், சங்கத் தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரான கே.பணீந்திர ரெட்டி, தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவராக பங்கஜ்குமார் பன்சல், செயலாளராக மைதிலி கே.ராஜேந்திரன், இணை செயலாளர்களாக டி.ஜெகநாதன், லட்சுமிப்பிரியா, பொருளாளராக கிருஷ்ணன் உன்னி, செயற்குழு உறுப்பினர்களாக எம்.எஸ்.சண்முகம், பூஜா குல்கர்னி, வி.ராஜாராமன், கே.நந்தகுமார், ஏ.ஆர்.அருள்நாத், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஜெ.மேகநாத ரெட்டி, கே.பி.கார்த்திகேயன், கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT