மக்களவையை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருந்த தேர்வாகியுள்ள 39 எம்.பிக்களில் 7 கட்சிகள் வாரியாக செயல்திறன் விவரம் வெளியாகியுள்ளது.
மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து தொகுத்துள்ள பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் கட்சிகள் வாரியாகவும், அகில இந்திய அளவிலும் எம்.பி.க்களின் செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ளது. பிஆர்எஸ் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிபடையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி17-வது மக்களவையை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருந்த தேர்வாகியுள்ள 39 எம்.பிக்கள்7 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த எம்.பி.க்களின் மொத்த செயல்பாடு கட்சிகள் அடிப்படையில் எப்படி அமைந்துள்ளது என பார்க்கலாம்.
கட்சிகள் வாரியாக தமிழக எம்.பி.க்களின் செயல்திறன்
திமுக, மொத்த மக்களவை எம்.பி.க்கள் 24 பேர்: சராசரி 38.4
காங்கிரஸ், மொத்த மக்களவை எம்.பி.க்கள் 8 பேர்: 51
சிபிஐ, மொத்த மக்களவை எம்.பி.க்கள் 2 பேர்: சராசரி 71.5
சிபிஎம், மொத்த மக்களவை எம்.பிக்கள் 2 பேர்: சராசரி 57.5
அதிமுக, மொத்த மக்களவை எம்.பி.க்கள் ஒருவர்: 78
விசிகே, மொத்த மக்களவை எம்.பி.க்கள் ஒருவர்: 44
முஸ்லிம் லீக், மொத்த மக்களவை எம்.பிக்கள் ஒருவர்: 64
தமிழக மக்களவை எம்.பி.க்களின் மொத்த சராசரி செயல்திறன் 45.5 ஆக உள்ளது. தேசிய அளவில் இந்த சராசரி 42.7 என்ற அளவில் உள்ளது. அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களை மகாராஷ்டரா மற்றும் கேரள மாநிலங்கள் பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா மக்களவை எம்.பி.க்களின் சராசரி செயல்திறன்80.1
கேரளா எம்.பி.க்களின் சராசரி செயல்திறன் 71.1 ஆக உள்ளது.
கட்சிகளின்படி கணக்கிட்டால் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் முதலிடம் பிடித்தள்ளனர். மக்களவையில் அக்கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அவர்களின் செயல்திறன் சராசரி 104.5 புள்ளிகளாக உள்ளது.
WRITE A COMMENT