Published : 23 Dec 2019 08:09 AM
Last Updated : 23 Dec 2019 08:09 AM
பயிர்க் காப்பீடு இழப்பீடு பாரபட்சத்துடன் நிர்ணயிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு தனிநபர் காப்பீடே உரிய தீர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் எதிர்பாரா மகசூல் இழப்பு, விவசாயி களின் வாழ்வாதாரம் மற்றும் வரு மானம் பாதிக்கப்படுவதுடன் வேளாண் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்து கிறது. விவசாயிகளுக்கு மகசூல் பாதிப் பால் ஏற்படும் இழப்பு பயிர்க்காப் பீடு மூலம் ஈடுசெய்யப்படுகிறது.
விதைப்பு மற்றும் நடவு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்தல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு கள், பகுதி சார்ந்த இயற்கை சீற்றங்கள் (புயல், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை மற்றும் வெள்ளப் பெருக்கு) மற்றும் பயிர் வளர்ச்சியின்போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கப் படுகிறது.
இந்நிலையில், தற்காலிக பணியாளர்களைக் கொண்டு மாதிரி அறுவடை மகசூல் இழப்பீடு தயாரிப் பதில் வேளாண் துறை பாரபட்சம் காட்டு வதாகவும் அதனால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
ஒரு கிராமத்தில் குலுக்கல் முறையில் இரண்டு சர்வே நம்பர்களைத் தேர்வு செய்து, அங்குள்ள வயல்களில் புள்ளியல் துறை, வருவாய்த் துறை, வேளாண் துறை, காப்பீடு நிறுவனங்களின் அதிகாரிகள் மேற்பார்வையில் மாதிரி அறுவடை செய்யப்படுகிறது. அதன்படி, மகசூல் பாதிப்பு கணக்கிடப்பட்டு, பயிர்க் காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
விவசாயிகள் அதிருப்தி
இப்பணி, வேளாண் துறையால் தற்காலிகமாக நியமிக்கப்படும் பணி யாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப் படுகிறது. அவ்வாறு செய்யும்போது, விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக விவசாயிகளிடம் அதிருப்தி இருந்து வருகிறது. அதே நேரம், இந்த அடிப்படையில் இழப்பீடு தொகை நிர்ணயம் செய்ததில், சந்தேகம் இருந்தால், மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கண்ட வயல்களின் செயற்கைக் கோள் படம் கேட்டு பெறப்பட்டு, ஆய்வு செய்யப்படுகிறது.
மேலும், மாதிரி அறுவடையின் இறுதி ஆய்வறிக்கை, அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்றுத்தான் அரசுக்கும், காப்பீடு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் என்பதால் இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வறிக்கையை கவன முடன் இறுதி செய்வார்கள். எனவே, இழப்பீட்டுத் தொகையை உரிய முறையில் கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு கூறும் போது, “முன்பு, மாவட்ட அளவில் மகசூல் இழப்பு சராசரி அடிப்படையில் கணக் கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டது. பின்னர், தாலுகா அளவில், வருவாய் பிர்கா அளவில் கணக்கிடப்பட்டது. இப்போது கிராம அளவில் ஓரிரு சர்வே நிலத்தில் ஏற்பட்டுள்ள மகசூல் இழப்பு அடிப்படையில் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
எளிமைப்படுத்த வேண்டும்
இதை மேலும் எளிமைப்படுத்தி, அதாவது தனிநபர் காப்பீடு வழங்கினால் மட்டும்தான் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்கும். அதைச் செய்வதற்கு போதிய நெட்வொர்க் இல்லை, பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது என்கிறது அரசு.
அனைத்து கிராமங்களிலும் உள்ள நிர்வாக அலுவலரிடம் எந்த நிலத்தில் என்ன மகசூல் செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் கொண்ட அடங்கல் உள் ளிட்ட ஆவணங்கள் உள்ளன. அதனால், அவரே மகசூல் இழப்பை கணக்கிட்டு அரசுக்கு அறிக்கை தரலாம். இதைச் செய்வதற்கு அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.
புலியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜன் கூறும்போது, “எங்கள் கிராம விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு திட்டத்தின்கீழ் இழப்பீடு கிடைத்துள்ளது. ஆனால், அருகில் உள்ள தோவூர் கிராம விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக் கவில்லை. எனவே, இழப்பீட்டுக்கான கணக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து வேளாண் அதிகாரி கூறும்போது, “ஆட்சியர் தலைமையிலான தொழில்நுட்பக் குழு மற்றும் மாநில அளவிலான ஆலோசனைக் குழு மேற் பார்வையில்தான் பயிர்க் காப்பீடு இழப் பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்படு கிறது. அதனால் மகசூல் பாதித்த விவசாயி கள் அனைவருக்கும் இழப்பீடு நிச்சயம் கிடைக்கும்‘‘ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT