Published : 22 Dec 2019 08:26 AM
Last Updated : 22 Dec 2019 08:26 AM

நெல்லையில் 25 டன் ரேஷன் சர்க்கரையுடன் சாலையோர தரைமட்ட கிணற்றில் மூழ்கிய லாரி: அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் அதிர்ச்சி

திருநெல்வேலி

திருநெல்வேலியில் 25 டன் ரேஷன் சர்க்கரையுடன் கனரக லாரி சாலை யோர கிணற்றில் முழுமையாக மூழ்கியது.

சேலம் அருகே மோகனூர் அரசு சர்க்கரை ஆலையில் இருந்து கனரக லாரியில் 30 டன் சர்க்கரை ஏற்றப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு கொண்டு வரப்பட்டது. லாரியை திண்டுக்கல் நெல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்தார்.

திருநெல்வேலி - மதுரை பிர தான சாலையில் தாழையூத்து அருகே உள்ள நுகர்பொருள் வாணி பக் கிட்டங்கிக்கு அந்த லாரி நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்து சேர்ந் தது. காலை 10 மணிக்கு மேல்தான் கிட்டங்கிக்குள் செல்ல முடியும் என்பதால், ஓட்டுநர் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு அதனுள் படுத்து தூங்கிவிட்டார்.

கிணற்றுக்குள் சரிந்தது

காலை 8 மணிக்கு அவர் எழுந்த போது, லாரி ஒருபுறமாக சரிந்து நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந் தார். லாரியில் இருந்து சில அடி தூரத்தில் சாலையோர தரைமட்டக் கிணறு இருப்பதும், சாலைக்கும், கிணற்றுக்கும் இடையே இருந்த மண் சரிந்து கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

லாரி முழுவதும் சரிவதற்குள், மற்றொரு லாரியைக் கொண்டு வந்து சர்க்கரை மூட்டைகளை இடமாற்றுவதற்கு முயற்சி செய் தார்.

ஆனால், சர்க்கரை மூட்டைகளு டன் லாரி சரிந்து கிணற்றுக்குள் விழுந்து, முழுவதுமாக மூழ்கியது. லாரியின் சிறு பகுதி மட்டுமே வெளியே தெரிந்தது. தாழையூத்து போலீஸார் அந்த வழியாக போக்கு வரத்தை தடை செய்தனர். மின் வாரிய தொழிலாளர்கள் மின்சார இணைப்பை துண்டித்தனர். தீய ணைப்பு படையினர் கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணிகளில் ஈடு பட்டனர்.

வாகனப் போக்குவரத்து அதிக முள்ள சாலையோரம், கனரக லாரி மூழ்கும் அளவுக்கு மிகப்பெரிய தரைமட்டக் கிணறு இருந்தது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் யாரும் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x