Published : 22 Dec 2019 07:20 AM
Last Updated : 22 Dec 2019 07:20 AM
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற வுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் 4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள் ளது. இத்தேர்தலில் 91,975 பதவிகளுக்கு மொத்தம் 3 லட்சத்து 2,994 வேட்புமனுக் கள் பெறப்பட்டன. வேட்புமனுக்கள் பரிசீலனையில் 3,643 மனுக்கள் நிராகரிக் கப்பட்டன. 48,891 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதுதவிர 18,570 பதவி களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தற்போது 2 லட்சத்து 31,890 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இத்தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் 4 லட்சத்து 2,195 அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர். வரும் 27-ம் தேதி முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வரு கின்றன. அதற்காக திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு, வாக்குப்பதி வின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை, வாக்குச்சீட்டுகளை மடிக் கும் முறை, வாக்குகள் பதிவான பின்னர் பெட்டிகளுக்கு சீல் வைக்கும் முறை, அவற்றை பாதுகாப்பாக உரிய அலுவலர்களிடம் ஒப்படைப்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதேபோல், இன்று திருவண்ணாமலை உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளதால், குறை வான நாட்களே உள்ள நிலையில், தேவை யான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்குச் சீட்டுகளை பாதுகாப்பாக பொது மையங் களுக்கு அனுப்பும் பணிகளும் நடை பெற்று வருகின்றன. வாக்குகள் பதிவான பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் இடங்களையும் மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு செய்து வருகின்றனர்.
அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரத் தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சுவர் விளம்பரங்கள் எழுதுவது மற்றும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது போன்றவற்றுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்தல் பிரச்சாரத்துக்காக வாகனங் களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகள், பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படாதவாறு, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பயன் படுத்த அனுமதிக்கப்படுகிறது. பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதாக இருந் தால், காவல்துறையின் முன்அனுமதி பெற வேண்டும். விதிகளை மீறினால் ஒலிப் பெருக்கிகள் மற்றும் அதனுடன் தொடர் புடைய அனைத்து கருவிகளும் பறிமுதல் செய்யப்படும். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சார்பில் எந்த சூழ்நிலையிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டிகள் ஒட்டுவதோ கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்ப்பதற்கான சிறப்பு முகாம் வரும் ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
கடந்த 17-ம் தேதி வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போது 6 கோடியே 1,329 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287, பெண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118, மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 924 பேர் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT