Published : 20 Dec 2019 10:50 AM
Last Updated : 20 Dec 2019 10:50 AM
திருநெல்வேலியில் வயது முதிர்ந்த தந்தையை பராமரிக்காத மகனிடம் இருந்த சொத்தை பறிமுதல் செய்து, முதியவரிடம் சார் ஆட்சியர் ஒப்படைத்தார்.
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பூதத்தான் (85). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி அம்மா பொண்ணு. இவ ருக்கு மகாலிங்கம் என்ற மகன் உள் ளார். 2-வது மனைவி பார்வதி. இவ ருக்கு முருகன், செல்வி என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.
பூதத்தான் தனக்கு சொந்தமான வீடு மற்றும் 8 சென்ட் நிலத்தை முருகன் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால், தந்தையை கவனிக்காமல் அவரை வீட்டிலிருந்து முருகன் வெளியேற்றியதாக தெரிகிறது.
இதையடுத்து மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட் டத்தின் மூலம் தன்னை பராமரிக்கா மல் வீட்டிலிருந்து வெளியேற்றிய மகனிடம் இருந்து சொத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் ஜெனி மூலம் திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஷ் நாரணவரேயிடம் மனு அளித்தார்.
அந்த மனுமீது விசாரணை மேற்கொண்ட சார் ஆட்சியர், முருகனிடம் இருந்து சொத்தை பறிமுதல் செய்து பூதத்தான் வசம் திரும்ப ஒப்படைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT