Published : 20 Dec 2019 08:57 AM
Last Updated : 20 Dec 2019 08:57 AM
குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை கண்காணிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் உட்பட பல வட மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இந்த சம்பங்களை தொடர்ந்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆங்காங்கே சில கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் புதுக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மற்றும்சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், போராட்டம் நடத்தும் மாணவர்களை கண்காணிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் தடுக்கும்நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக போராட்டத்துக்கு ஆட்களை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வந்த 6 மாணவர்களை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
மேலும், மாணவர்கள் போராட்டத்தை தடுக்கும் வகையில் தற்போதுவிடுமுறை விடப்பட்டுள்ள கல்லூரிகளைமீண்டும் திறக்கும்போது, பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தவும், போராட்டம் நடத்த திட்டமிட்டால்கூட உடனே தகவல்தெரிவிக்கவும், தீவிர கண்காணிப்புடன் இருக்கும்படியும் காவல் துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT